எண்களும் தொழில்களும்
இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்காகவும் நம்மை சேர்ந்தவர்களுக்காகவும் ஏதேனும் ஒரு தொழில் செய்தோ அல்லது ஒரு அலுவலகத்தில் பணி புரிந்தோ அனுதினமும் உழைக்கிறோம். ஆனால் தான் செய்யும் வேலையில் ஆத்ம திருப்தி அடைந்தோர் ஒரு சிலரே. அதிலும் அதில் வெற்றி அடைந்தோர் மிக சிலரே. யார் வேண்டுமானாலும் எந்த வேலை அல்லது தொழிலையும் செய்யலாம். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அதில் வெற்றி பெற முடிகிறது.அதற்கு காரணம் நமக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்யாததே.
இங்கேதான் எண் கணிதம் நம்மை வழி நடத்துகிறது. இதனை வாழ்வில் பின் பற்றினால் வெற்றி உறுதி.
இதன் ஒரு பகுதியாக 03-06-2001 ல் மாலை மலர் நாளிதழின் இணைப்பான "ஆரூடம்" இதழில் வெளியான என்னுடைய எண் கணித குறிப்பு கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். எண் கணிதத்தை பின் பற்றி வாழ்வில் வளமோடு வாழ்வோம்.
வாழ்க வளமுடன் !!! மஹா கணபதியே சரணம் !!!
அன்புடன்,
தளபதி நாகராஜ்.



